ஞாயிறு, 21 ஜூன், 2009
இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டம்
தமிழக அரசின் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய பகுதியைச் சேர்ந்த பள்ளிகளில் உதவி மருத்துவர் மரு.எம்.விஜயராகவன் தலைமையிலான குழு மாணவர்களை பரிசோதித்தது . அவர்களில் இருதய பாதிப்பு உள்ள குழந்தைகளை , பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு பரிசோதித்து , அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளிலேயே அரசின் நிதி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது . செய்யாறு சுகாதார மாவட்டத்தில் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பெருங்கட்டூர் உதவி மருத்துவர் மரு.எம்.விஜயராகவன் நியமிக்கப்பட்டுள்ளார் . அவருக்கு உதவியாக நாட்டேரி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் திரு.கே.சம்பத் செயல்படுகிறார் .இதுவரை செய்யாறு சுகாதார மாவட்டத்தை சேர்ந்த 38 குழந்தைகளுக்கு இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக