திங்கள், 31 ஆகஸ்ட், 2009

H1N1 ஒரு வீடியோ பதிவு

சனி, 15 ஆகஸ்ட், 2009

பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள்

* சோலார் வாட்டர் ஹீட்டர் 200 லிட்டர் கொள்ளளவு
( மோட்டர் , பைப்லைன்கள் மற்றும் புதிய மேல்நிலை தொட்டி உட்பட ) திரு.அ.பன்னீர்செல்வம் ‍, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் , அசனமாப்பேட்டை .
* குடிநீர் குழாய் வசதி ( மோட்டர் , பைப்லைன்கள் அமைத்து கொடுத்தது )
திரு.பி.கனகசபை , ஜவுளி வியாபாரம் ,அசனமாப்பேட்டை .
* சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ( R.O.System Water Purifier )
திரு.கே.எஸ்.செல்வராஜி , குமரன் தங்க மாளிகை , செய்யாறு .
* பிரசவ அறை , வார்டுக்கு தனியாக 0.8 KV Invertor
திரு.பி.ஜெயக்குமார் , பாலாஜி தங்க மாளிகை , செய்யாறு .
* நோயாளிகள் காத்திருப்பு அறையில் 1200 சதுர அடி பரப்புக்கு வழுக்காத Eurocon Tiles பதித்துக் கொடுத்தது ( மற்றும் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பல்வேறு உதவிகளை எப்போது கேட்டாலும் செய்து தருபவர் )
திரு.ஆர்.வேல்முருகன் , ஒன்றியக்குழு துணைத்தலைவர் , தி.மு.க.ஒன்றியச் செயலாளர் , அசனமாப்பேட்டை .
* Voltas Hot and Cold Water dispenser
திரு.ஏ.என்.சம்பத் , நகரமன்றத் தலைவர் , செய்யாறு .
* Samsung Automatic Washing Machine
திரு.M.G.பாபு ,ராமகிருஷ்ணாபுரம் .
* Whirlpool 190 Lit Refrigerator
திரு.T.G.மணி , வழக்கறிஞர் , விஸ்டம் கல்வி அறக்கட்டளை , செய்யாறு.
* Newborn baby Kits for 1 year
திரு.K.வெங்கட்ராமன் , வழக்கறிஞர் , செய்யாறு.
* Public address system
திரு.எம்.தினகரன் , ஊ.ம.தலைவர் , சிறுவஞ்சிப்பட்டு .
* பெருங்கட்டூர் துணை சுகாதார நிலையம் கட்ட 7 சென்ட் நிலம்
திருமதி . மல்லிகா பாலகிருஷ்ணன் , ஊ.ம.தலைவர் , தென்கழனி .

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

30 ப‌டுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நிலைய கட்டிடம்- பூமிபூஜை-12/02/2009

பெருங்கட்டூர் ஆ.சு.நிலைய வளாகத்தில் 30 ப‌டுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நிலைய கட்டிடம் கட்ட 12/02/2009 அன்று பூமிபூஜை போடப்பட்டது .








இன்றைக்கு 02/08/2009 கட்டிடம் சிறப்பாக கட்டப்பட்டு இறுதிகட்ட வேலைகள் நடந்துகொண்டுள்ளது . இன்றைய தோற்றம் இதோ....







30 ப‌டுக்கை வசதியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நிலைய கட்டிட பணிகளை பார்வையிட்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் , கட்டிட பணிகளை மிகவும் பாராட்டி தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சித்த மருத்துவ பிரிவு தனி கட்டிடத்துக்கும் , நோயாளிகளுடன் வருபவர்கள் த‌ங்குமிடத்திற்காகவும்
ரூ.7 இலட்சம் அளித்தார் . அவருக்கு பெருங்கட்டூர் ஆ.சு.நிலையத்தின் சார்பில் ந‌ன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

பெருங்கட்டூர் ஆ.சு.நிலையத்தில் இரத்ததான முகாம் 25/07/2009













பெருங்கட்டூர் ஆ.சு.நிலையத்தில் தன்னார்வ இரத்ததான முகாம் 25/07/2009
அன்று ந‌டத்தப்பட்டது . முகாமில் 103 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் அளித்தனர் . செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி இரத்தவங்கி மருத்துவர் மரு.சூசன் தலைமையிலான குழுவினர் இரத்ததானம் பெற்றுச்சென்றனர் . முகாமில் கிராமங்களைச் சேர்ந்த இளைஞ‌ர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்ததானம் அளித்தனர் . ஒரு வார காலமாக கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்களும் , ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்ததன் பலனாக , இந்த அளவு இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் .

சனி, 1 ஆகஸ்ட், 2009

வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் - 25/06/2009





வளர் இளம் பெண்களுக்கான பயிற்சி முகாம் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார‌ நிலையத்தில் 25/06/2009 அன்று நடத்தப்பட்டது . வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தின‌வேல், உதவி மருத்துவர் மரு.வி.உதயசங்கர், சமுதாய சுகாதார செவிலியர் திருமதி .கீதா ராபர்ட்ஸ் , ஊட்டச்சத்து துறை பயிற்றுநர் திருமதி . செல்வி ஆகியோர் கலந்து கொண்டு நலக்கல்வி அளித்தனர் .

இரத்ததானமுகாம் 28/07/2009











நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் இரத்ததான முகாம் இராந்தம் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட‌ ஆதிபகவன் மருந்தியல் கல்லூரியில் 28/07/2009 அன்று நடைபெற்றது . முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் , நாட்டேரி உதவி மருத்துவர் மரு . எம்.ராஜா, சுகாதார ஆய்வாளர் திரு.கே.சம்பத் , கல்லூரி முதல்வர் திருமதி த‌மிழ்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர் . முகாமில் 22 மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் அளித்தனர் . காஞ்சிபுரம் அறிஞ‌ர் அண்ணா நினைவு புற்றுநோய் மைய இரத்த வங்கி மருத்துவர் மரு . ஜி.ராஜா தலைமையிலான குழுவினர் இரத்ததானம் பெற்றுச்சென்றனர் .

ம‌லேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் 28/06/2009







பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ம‌லேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு மாதம் ஜூன் 2009 தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் 28/06/2009 அன்று வடமணப்பாக்கம் கிராமத்தில் நடத்தப்பட்டது . நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் , மாவட்ட மலேரியா அலுவலர் திரு.கோ.மணிவர்மா , வடமணப்பாக்கம் ஊ.ம.தலைவர் திருமதி .மண்ணம்மாள் கேசவன் , சுகாதார ஆய்வாளர் திரு.வி.ஜி.ராதாகிருஷ்ணன் , வடமணப்பாக்கம் கிராம சுகாதார செவிலியர் திருமதி ஆர்.கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் , தூறல் மழையிலும் சுமார் 3 மணி நேரம் ஆர்வத்துடன் இரசித்தனர் .