ஞாயிறு, 31 மே, 2009

நவீன ஆண் குடும்பநல அறுவை சிகிச்சை ( N.S.V.) முகாம் ‍‍:08/05/2009


08/05/2009 அன்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 ஆண்களுக்கு நவீன‌ ஆண் குடும்பநல அறுவை சிகிச்சை ( N.S.V.)நடத்தப்பட்டது . வழூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு எஸ் . ராஜா , மரு.சி.காவேரி,மரு.எம்.விஜயராகவன் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர் . வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் தலைமையில் 9 சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கிராமம்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி ,அறுவை சிகிச்சை பயனாளிகளை தேர்வு செய்தனர் .

தமிழக அரசின் குடும்ப நல நிதிபணியில் இருக்கும்போது இயற்கை எய்திய மாமண்டூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை பணியாளரின் துணைவியாருக்கு தமிழக அரசின் குடும்ப நல நிதி ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் அவர்களால் வழங்கப்பட்டது .

உலக புகையிலை எதிர்ப்பு நாள் ஊர்வலம் 31/05/2009

உலக புகையிலை எதிர்ப்பு நாள் ஊர்வலம் 31/05/2009 அன்று வடமணப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது . வடமணப்பாக்கம் ஊராட்சி மன்றதலைவர் திருமதி . மண்ணம்மாள் கேசவன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் விளக்கிக் கூறினார் . முடிவில் கிராம சுகாதார செவிலியர் ஆர்.கல்யாணி நன்றி கூறினார் .