ஞாயிறு, 8 மார்ச், 2009

நெசவாளர் மருத்துவ முகாம் -22/ 03 /2008











































22/ 03 /2008 அன்று அசனமாப்பேட்டை கிராமத்தில் ஒருங்கிணைந்த கைத்தறி நெசவாளர் முன்னேற்ற குழுமத்தின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது .வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ஆர்.வேல்முருகன் முகாமினை துவக்கி வைத்தார் . ஒருங்கிணைந்த கைத்தறி நெசவாளர் முன்னேற்ற குழும உறுப்பினர் திரு.எல்.கோபால், அசனமாப்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் திரு.கே.ஏ.பூபதி ஆகியோர் துவக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த அனைத்து மருத்துவ அலுவலர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசோதனைகள் செய்தனர்.

சனி, 7 மார்ச், 2009

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிப்பணிகள்






















சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்பட்ட தடுப்பூசி துர்மரணங்களால் , அனைத்து தடுப்பூசிப்பணிகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் மேற்பார்வையில் மட்டுமே போடவேண்டும் என்ற அரசின் உத்தரவின் பேரில் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகள் போடப்படுகின்ற காட்சியை காணலாம் . அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள் , செவிலியர் , துணை செவிலியர்கள் தடுப்பூசிகளை பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போடுகின்றனர் . தொலைவில் உள்ள குழந்தைகள் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய அவசர ஊர்தியில் thuவரப்பட்டு , தடுப்பூசி போட்டு சிறிது நேரம் மருத்துவரின் மேற்பார்வையில் இருந்து பின்பு தத்தம் இடங்களுக்கு கொண்டு விடப்படுகின்றனர் . குழந்தைகளுக்கும் , தாய்மார்களுக்கும் பால் , ரொட்டி போன்றவை கிராம சுகாதார குழுமம் மற்றும் கட்டுப்படுத்தப்படாத நிதி மூலமாக வழங்கப்படுகிறது .

செவ்வாய், 3 மார்ச், 2009

வருமுன் காப்போம் முகாம் - சட்டுவந்தாங்கல்-20.09.2007




























































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சட்டுவந்தாங்கல் கிராமத்தில் 20.09.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் தலைமை தாங்கினார் .வெம்பாக்கம் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி .லட்சுமி சங்கர் முகாமை துவக்கி வைத்தார் . ஒன்றிய‌க்குழு உறுப்பினர்கள் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . அரியூர் உதவி மருத்துவர் மரு . ப்பி.செல்லதுரை நன்றி கூறினார் . முகாமில் மகப்பேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

வருமுன் காப்போம் முகாம் -இராந்தம்-09.08.2007




























































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் இராந்தம் கிராமத்தில் 09.08.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் தலைமை தாங்கினார் .வெம்பாக்கம் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி .லட்சுமி சங்கர் முகாமை துவக்கி வைத்தார் . இராந்த‌ம் ஒன்றிய‌க்குழு உறுப்பினர் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . நாட்டேரி உதவி மருத்துவர் மரு . டி .நந்தகுமார் நன்றி கூறினார் . முகாமில் மகப்பேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .

வருமுன் காப்போம் முகாம் -மாமண்டூர்-30.06.2007

























































































































மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மாமண்டூர் கிராமத்தில் 30.06.2007 அன்று நடைபெற்றது . முகாமிற்கு துணை இயக்குநர் மரு . கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கினார் .வெம்பாக்கம் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி .லட்சுமி சங்கர் முகாமை துவக்கி வைத்தார் . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு . வ.அன்பழகன் முன்னிலை வகித்தார் . ஒன்றிய‌க்குழு துணைத்தலைவர் திரு . ஆர். வேல்முருகன் சிறப்பு அழைப்பாளர்களாக‌ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .மாமண்டூர் ஒன்றிய‌க்குழு உறுப்பினர் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , அரசு அதிகாரிகள் , மருத்துவர்கள் , களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் மரு . தெ .இரத்தினவேல் வரவேற்றார் . மாமண்டூர் உதவி மருத்துவர் மரு . கே . லட்சுமி நன்றி கூறினார் .