சனி, 7 மார்ச், 2009

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிப்பணிகள்






















சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்பட்ட தடுப்பூசி துர்மரணங்களால் , அனைத்து தடுப்பூசிப்பணிகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் மேற்பார்வையில் மட்டுமே போடவேண்டும் என்ற அரசின் உத்தரவின் பேரில் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகள் போடப்படுகின்ற காட்சியை காணலாம் . அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள் , செவிலியர் , துணை செவிலியர்கள் தடுப்பூசிகளை பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போடுகின்றனர் . தொலைவில் உள்ள குழந்தைகள் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய அவசர ஊர்தியில் thuவரப்பட்டு , தடுப்பூசி போட்டு சிறிது நேரம் மருத்துவரின் மேற்பார்வையில் இருந்து பின்பு தத்தம் இடங்களுக்கு கொண்டு விடப்படுகின்றனர் . குழந்தைகளுக்கும் , தாய்மார்களுக்கும் பால் , ரொட்டி போன்றவை கிராம சுகாதார குழுமம் மற்றும் கட்டுப்படுத்தப்படாத நிதி மூலமாக வழங்கப்படுகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக