சனி, 1 ஆகஸ்ட், 2009

ம‌லேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் 28/06/2009பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ம‌லேரியா நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு மாதம் ஜூன் 2009 தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் 28/06/2009 அன்று வடமணப்பாக்கம் கிராமத்தில் நடத்தப்பட்டது . நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் , மாவட்ட மலேரியா அலுவலர் திரு.கோ.மணிவர்மா , வடமணப்பாக்கம் ஊ.ம.தலைவர் திருமதி .மண்ணம்மாள் கேசவன் , சுகாதார ஆய்வாளர் திரு.வி.ஜி.ராதாகிருஷ்ணன் , வடமணப்பாக்கம் கிராம சுகாதார செவிலியர் திருமதி ஆர்.கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் , தூறல் மழையிலும் சுமார் 3 மணி நேரம் ஆர்வத்துடன் இரசித்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக