சனி, 1 ஆகஸ்ட், 2009

டெங்கு நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு மாதம் ஜூலை 2009 - 28/07/2009


பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு மாதம் ஜூலை 2009 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 28/07/2009 அன்று நடத்தப்பட்டது . நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் , மாவட்ட மலேரியா அலுவலர் திரு.கோ.மணிவர்மா , மருத்துவ அலுவலர் மரு.எம்.விஜயராகவன் , சுகாதார ஆய்வாளர் திரு.வி.ஜி.ராதாகிருஷ்ணன் , சமுதாய சுகாதார செவிலியர் திருமதி . கீதா ராபர்ட்ஸ் , அனைத்து பகுதி சுகாதார செவிலியர்கள் , அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள் , மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் கம்பூசியா மீன்கள் கொசுப்புழுக்களை அழிப்பது பற்றிய செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது . மாணவர்களுக்கு சுகாதார தூதுவர் அட்டை வழங்கப்பட்டது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக