சனி, 20 ஜூன், 2009

மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு மாதம் ‍‍‍ஜுன் 2008

பத்திரிகைச் செய்திகள் :
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு மாதம் ‍‍‍ஜுன் 2008ல் க‌டைபிடிக்க‌ப்ப‌ட்ட‌து . பெருங்க‌ட்டூர் அர‌சின‌ர் மேல்நிலைப்ப‌ள்ளி த‌லைமையாசிரிய‌ர் திரு.ச‌ண்முக‌சுந்த‌ர‌ம் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ க‌ல‌ந்து கொண்டார் . வ‌ட்டார‌ ம‌ருத்துவ‌ அலுவ‌ல‌ர் ம‌ரு.தெ.இர‌த்தின‌வேல் , பெருங்க‌ட்டூர் உத‌வி ம‌ருத்துவ‌ர்க‌ள் ம‌ரு.ஜெ.ஜெய‌ல‌தா , ம‌ரு.எம்.விஜ‌ய‌ராக‌வ‌ன் ,மாம‌ண்டூர் உத‌வி ம‌ருத்துவ‌ர் ம‌ரு.ஷ‌ண்முக‌ராஜ‌ன் , சுகாதார ஆய்வாள‌ர்க‌ள் திரு.வி.ஜி.ராதாகிருஷ்ண‌ன்,திரு.கே.சம்ப‌த் ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
*ப‌ள்ளி மாணவ‌ர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன .
*ப‌ள்ளி த‌லைமை ஆசிரிய‌ர் , ஆசிரிய‌ர்க‌ளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு , மாண‌வ‌ர்க‌ளை சென்ற‌டையும் வ‌ண்ண‌ம் விளக்க‌ப்ப‌ட்ட‌து .

*ப‌ள்ளி மாணவ‌ர்களுக்கு சுகாதார‌ தூதுவ‌ர் அடையாள‌ அட்டை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து .


*ப‌ள்ளி மாணவ‌ர்களுக்கு நீர்நிலைகளில் வளரும் கொசுப்புழுக்க‌ளை அழிக்கும் க‌ம்பூசியா மீன் குஞ்சுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து .*த‌ன்னார்வ‌ல‌ர்க‌ளுக்கு இரத்தத் தடவல் ப‌யிற்சி அளிக்க‌ப்ப‌ட்டு , காய்ச்ச‌ல் சிகிச்சை முத‌லுத‌வி மாத்திரைக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து .

*க‌ம்பூசியா மீன் குஞ்சுக‌ள் வளர்க்கும் தொட்டியை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு . எம் . கே . விஷ்ணுபிரசாத் பார்வையிட்டார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக