ஞாயிறு, 21 ஜூன், 2009

இரத்ததான முகாம் 03/06/2008



























மாண்புமிகு தமிழக முதல்வரின் 85வது பிறந்தநாளை முன்னிட்டு பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது .வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார் . செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கினார் . பெருங்கட்டூர் , தென்கழனி,அசனமாப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர் . காஞ்சிபுரம் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மைய இரத்தவங்கி மருத்துவர் மரு.கிருபாகரன் இரத்ததானம் பற்றி விளக்கினார். வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ஆர்.வேல்முருகன் முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் .செய்யாறு அரிமா சங்கத்தலைவர் திரு .வரதராஜன் வாழ்த்துரை வழங்கினார் . காஞ்சிபுரம் , செங்கல்பட்டு இரத்தவ‌ங்கி மருத்துவக்குழுவினர் இரத்ததானம் பெற்றுச் சென்றனர் . நகரங்கள் , கல்வி நிறுவனங்களை சாராமல் கிராமத்தில் , ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 85 பேர் இரத்ததானம் செய்தனர் . முடிவில் உதவி மருத்துவ அலுவலர் மரு .எம்.விஜயராகவன் நன்றி கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக