செவ்வாய், 16 ஜூன், 2009
எம் . பி . ஹெல்த் மேளா 23/02/2008
23/02/2008 அன்று மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி சுகாதார திருவிழா திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் ( எம் . பி . ஹெல்த் மேளா ) பெருங்கட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது .
( அன்றைய ) மாண்புமிகு மத்திய சுகாதாரம் ( ம ) குடும்பநலத்துறை அமைச்சர் மரு . அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்பித்தார் . செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு. கொ.ச.தி.சுரேஸ் வரவேற்றார்.( அன்றைய ) மாண்புமிகு மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர் திரு . அரங்க.வேலு ,( அன்றைய )மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . சத்யபிரத சாகு , செய்யாறு ச.ம.உ. மரு .எம்.கே.விஷ்ணுபிரசாத் , பெரணமல்லூர் ச.ம.உ. திரு.எதிரொலி மணியன் , மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு . மு.பெ.கிரி , சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மரு. விஜயகுமார், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் திருமதி . இலட்சுமி சங்கர் , வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ஆர் . வேல்முருகன் ,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் . முகாம் வளாகத்தில் சிறப்பான மருத்டதுவ கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது . பள்ளி மாணவியின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது . ஜே.எஸ்.ஒய்.நிதி வழங்கப்பட்டது . முகாமிற்கு வந்த கர்ப்பணித்தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது .தென்கழனி ஊராட்சி சார்பில் பெருங்கட்டூர் துணை சுகாதார நிலையம் கட்ட நிலம் தானமாக வழங்கப்பட்டது . நன்கொடையாளர்கள் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சோலார் வாட்டர் ஹீட்டர் , ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் வாட்டர் பியூரிபையர் போன்றவற்றை வழங்கினர் . முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் நன்றி கூறினார் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக