ஞாயிறு, 14 ஜூன், 2009

மாண்புமிகு மத்திய சுகாதார அமைச்சர் வருகை : 23/02/2008
23/02/2008 அன்று நமது பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (அன்றைய ) மாண்புமிகு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மரு.அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார் . அவருடன் (அன்றைய )மத்திய தொடர்வண்டித்துறை இணை அமைச்சர் திரு.அரங்க.வேலு , (அன்றைய) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சத்யபிரத சாகு , செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு . எம்.கே.விஷ்ணுபிரசாத் , இணை இயக்குநர் ( நல‌ப் பணிகள் ) மரு.விஜயகுமார் , துணை இயக்குநர் ( நல‌ப் பணிகள் ) மரு.கொ.ச.தி. சுரேஸ் , ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி . லட்சுமி சங்கர் , ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு . ஆர்.வேல்முருகன் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அரசு அதிகாரிகள் , ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் பயனாளிகள் நலச்சங்கம் ( ம ) பொதுப்பணித்துறை நிதி மூலம் புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ,புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய அறுவை அரங்கம் , புதுப்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ அறை ( ம ) வார்டு ஆகியவற்றை திறந்து வைத்தார் . பிரசவித்த தாய்மார்களுக்கு J.S.Y. திட்ட நிதி உதவி ( ம ) பிரசவித்த தாய்மார்களுக்கு உணவு வழங்கினார் . நோயாளிகளின் வசதிக்காக B.S.N.L. மூலம் அமைக்கப்பட்ட ஒரு ரூபாய் தொலைபேசி பெட்டியை துவக்கி வைத்தார் . கம்பூசியா மீன் வளர்ப்புத்தொட்டி , மூலிகைத்தோட்டம் , ஆரம்பசுகாதார நிலைய வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு , பாராட்டினார் . மாண்புமிகு மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு ஆரம்பசுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் தம் எம்.பி. நிதியில் இருந்து பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.3 இலட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தார் .எம்.பி.தொகுதி சுகாதார திருவிழா திட்டத்தை துவக்கி வைத்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக