செவ்வாய், 16 ஜூன், 2009
இரத்ததான முகாம் - 01/07/2007 -டி.வி.எஸ்.ஆக்ஸில்ஸ் இந்தியா
01/07/2007 அன்று வெம்பாக்கம் ஒன்றியம் நமண்டி கிராமத்தில் உள்ள டி.வி.எஸ்.ஆக்ஸில்ஸ் இந்தியா நிறுவனத்தில் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது . முகாமினை செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு . கொ.ச.தி.சுரேஸ் துவக்கி வைத்தார் . செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவக்குழுவினர் மரு.சூசன் தலைமையில் கலந்துகொண்டு 107 யூனிட்டுகள் இரத்தம் தானமாகப் பெற்றனர். டி.வி.எஸ்.ஆக்ஸில்ஸ் இந்தியா நிறுவனத்தின் மருத்துவ அதிகாரி மரு.விஜயசங்கர் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இரத்ததான முகாம் மாபெரும் வெற்றியடையச் செய்தார் .ஷிப்ட் முடித்து செல்பவர்கள் , ஷிப்டுக்கு வருபவர்கள் என பணியாளர்கள் உற்சாகத்துடன் இரத்ததானம் அளித்தனர் . தன் இரத்தம் ஓர் அரசு மருத்துவமனையில் , ஏழை நோயாளியின் உயிரைக்காக்கும் என்பதை அறிந்து நெகிழ்வுடன் பணியாளர்கள் இரத்ததானம் அளித்தனர் . முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் நன்றி கூறினார் .( முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் , நாட்டேரி உதவி மருத்துவ அலுவலர்கள் மரு.கௌரிசங்கர்,மரு நந்தகுமார் , மாவட்ட மலேரியா அலுவலர் திரு.கோ.மணிவர்மா , சுகாதார ஆய்வாளர் திரு .கன்னியப்பன் ஆகியோரும் இரத்ததானம் அளித்தனர் .)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக