செவ்வாய், 16 ஜூன், 2009
இரத்ததான முகாம்-21/09/2007 -ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி
21/09/2007 அன்று முள்ளுவாடி கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது . முகாமினை கல்லூரி முதல்வர் திரு.சீனிவாசன் துவக்கி வைத்தார் . வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவக்குழுவினர் மரு.சிவராமன் தலைமையில் கலந்துகொண்டு 79 யூனிட்டுகள் இரத்தம் தானமாகப் பெற்றனர். ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர்.மோகன்குமார், உதவி பேராசிரியர் திரு . லோகேஷ் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர் . தன் இரத்தம் ஓர் அரசு மருத்துவமனையில் , ஏழை நோயாளியின் உயிரைக்காக்கும் என்பதை அறிந்து நெகிழ்வுடன் மாணவ , மாணவியர் இரத்ததானம் அளித்தனர் . முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் நன்றி கூறினார் . கல்லூரியில் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் ஒரு பிரிவைச்சேர்ந்த மாணவ , மாணவியர் மட்டும் கலந்து கொண்டு முகாமினை வெற்றியடையச் செய்தனர் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக