மாண்புமிகு தமிழக முதல்வரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நமது ஒன்றியத்தில் வெம்பாக்கத்தில் 02.02.2007 ல் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு . எம்.கே.விஷ்ணுபிரசாத் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது . துணை இயக்குநர் மரு.கோ.ரெகுநாதன் தலைமை வகித்தார் . ஒன்றியக்குழு தலைவர் திருமதி.லட்சுமி சங்கர் முன்னிலை வகித்தார்.மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.வ.அன்பழகன் , ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ஆர்.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் .மகப்பேறு நிதி உதவி , இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார்.வெம்பாக்கம் உதவி மருத்துவர் மரு .ச.சுரேஷ்பாபு நன்றி கூறினார் . அரிமா சங்கத்தின் சார்பில் இலவச இரத்த வகை கண்டறியப்பட்டு இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது . மருத்துவர்கள் , களப்பணியாளர்கள்என மொத்தம் இருபத்தேழு பேர் கண்தானம் செய்ய பதிவு செய்தனர் . அரிமா சங்கத்தின் சார்பில் இரத்ததான விழிப்புணர்வு பலகை வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலில் வைக்கப்பட்டது .
ஞாயிறு, 1 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக