சனி, 28 பிப்ரவரி, 2009

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உத‌வி வழங்கும் விழா 20.01.2007

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உத‌வி வழங்கும் விழா 20.01.2007 அன்று செய்யாறு தாயார் அப்பாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . வெம்பாக்கம் , செய்யாறு ஒன்றியங்களைச் சேர்ந்த சுமார் 850 தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது .மாண்புமிகு தமிழக உணவு அமைச்சர் திரு . எ . வ. வேலு நிதி உதவியை வழங்கி சிறப்புரையாற்றினார் .மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . சத்யபிரத சாகு தலைமை வகித்தார் . செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு . எம் . கே. விஷ்ணுபிரசாத் முன்னிலை வகித்தார் . சட்டமன்ற உறுப்பினர்கள் , ஒன்றியக்குழு தலைவர்கள் , நகர்மன்றத்தலைவர் , உறுப்பினர்கள் , உதவி மருத்துவர்கள் , அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் . செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு . கோ. ரெகுநாதன் வரவேற்றார் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு . தெ . இரத்தினவேல் நன்றி கூறினார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக