சனி, 14 பிப்ரவரி, 2009

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குதல் 07.03.2008 முதல்















































































ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கர்ப்பகால பரிசோதனைகளுக்கு வரும் தாய்மார்களுக்கு ஸ்கேன் , அனைத்து இரத்தப்பரிசோதனைகள் , சத்தான உணவு பற்றிய விழிப்புணர்வு , கர்ப்பகாலஎச்சரிக்கை அறிகுறிகள் பற்றிய தகவல்களோடு சத்தான மதிய உணவு ( சாதம் , சாம்பார் , ரசம் , மோர், அப்பளம், முட்டை, கீரை , காய்கறி பொறியல் , வடை , பேரீச்சை , அயோடின்கலந்த உப்பு ) போன்றவை அளிக்கப்படுகிறது . 7 மார்ச் 2008 முதல் நமது நிலையத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது . 2007 ஜுன் முதல் கர்ப்பகால பரிசோதனைக்கு வரும் அனைத்து தாய்மார்களுக்கும் இலவசமாக பேரீச்சம்பழம் , அயோடைஸ்டு உப்பு போன்றவை வழங்கப்பட்டு வந்தது . 2008 மார்ச் முதல் சத்தான உணவு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு , நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . பயனாளிகள் நலச்சங்கம் , கிராம சுகாதார குழுமம் ,நன்கொடையாளர்கள் மூலம் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது . செய்யாறு சுகாதார மாவட்டத்தில் எங்கள் ஆ.சு.நிலையத்தில்தான் முதன்முதலில் இந்ததிட்டம் செயல்வடிவம் பெற்றது என்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம் .

2 கருத்துகள்:

சே.வேங்கடசுப்ரமணியன் சொன்னது…

முகப்பு மாற்றம் நன்று.

சே.வேங்கடசுப்ரமணியன் சொன்னது…

திரு.முரளி கண்காணிப்பாளர் அங்கு தான் உள்ளாரா?

கருத்துரையிடுக