சனி, 27 ஜூன், 2009
மலேரியா விழிப்புணர்வு மாதம் ஜூன் 2009
பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு மாதம் ஜூன் 2009 கொண்டாடப்பட்டது .பள்ளி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடத்தப்பட்டது . பேரணியில் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர் . பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் மலேரியா காய்ச்சல் பரவும் விதம் , கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் , சிகிச்சை முறைகள் போன்றவை பற்றி எடுத்துரைக்கப்பட்டது . கொசுப்புழுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது . கூட்டத்தில் மாவட்ட மலேரியா அலுவலர் திரு. கோ.மணிவர்மா , வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல்,சுகாதார ஆய்வாளர் திரு.வி.ஜி.இராதாகிருஷ்ணன் , கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக