ஞாயிறு, 21 ஜூன், 2009
ஆரம்ப சுகாதார நிலைய தினம் 16/06/2008
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலைய தினம் 16/06/2008 ல் கொண்டாடப்பட்டது .வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் வரவேற்றார் . செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கினார் . வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ஆர்.வேல்முருகன் முன்னிலை வகித்தார் . விழாவில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் சிறப்புரையாற்றினார் .
ஆரம்ப சுகாதார நிலைய தினத்தை முன்னிட்டு
*ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது .
*மரக்கன்றுகள் நடப்பட்டன .
*மகப்பேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டது .
*நன்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர் .
*நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையம் பற்றி சிறப்பாக பேசினார்கள் .
*முதியோர் , இயலாதோர்க்காக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கைப்பிடியுடன் கூடிய சாய்வு நடைபாதை பயனாளிகள் நலச்சங்கம் மூலம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது .
முடிவில் பெருங்கட்டூர் உதவி மருத்துவ அலுவலர் மரு .ஜெ.ஜெயலதா நன்றி கூறினார் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக