வியாழன், 5 பிப்ரவரி, 2009

போலியோ சொட்டு மருந்து அளிப்பவர்களுக்கு பயிற்சி 27/01/2009


21/12/2008ல் நடைபெற்ற முதல் சுற்று போலியோ சொட்டு மருந்து முகாமின்போது பரவிய வதந்தி காரணமாக இரண்டாம் சுற்று முகாமின்போது பொதுமக்களுக்கும் , பெற்றோர்களுக்கும் அச்சத்தை போக்கவும் , சரியான தகவல்களை அளிக்கவும் போலியோ சொட்டு மருந்து அளிப்பவர்களுக்கு பயிற்சி 27/01/2009 அன்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது . போலியோ சொட்டு மருந்தின் பாதுகாப்பு பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டது . வட்டார மருத்துவர் , உதவி மருத்துவர்கள்,மருத்துவமல்லா மேற்பார்வையாளர் , சுகாதார ஆய்வாளர் , கிராம சுகாதார செவிலியர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சொட்டு மருந்து அளிப்பவர்களும் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக