









நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் இரத்ததான முகாம் இராந்தம் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆதிபகவன் மருந்தியல் கல்லூரியில் 28/07/2009 அன்று நடைபெற்றது . முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் , நாட்டேரி உதவி மருத்துவர் மரு . எம்.ராஜா, சுகாதார ஆய்வாளர் திரு.கே.சம்பத் , கல்லூரி முதல்வர் திருமதி தமிழ்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர் . முகாமில் 22 மாணவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் அளித்தனர் . காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மைய இரத்த வங்கி மருத்துவர் மரு . ஜி.ராஜா தலைமையிலான குழுவினர் இரத்ததானம் பெற்றுச்சென்றனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக