சனி, 1 ஆகஸ்ட், 2009
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் துவக்கம் 01/08/2009
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச்சான்றிதழ் உடனடியாக வழங்கிட ஏதுவாக தமிழக அரசு உத்தரவின்படி , பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் 01/08/2009 அன்று துவக்கப்பட்டது . பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவர் மரு . எம்.விஜயராகவன் வரவேற்றார் . பெருங்கட்டூர் ஊ . ம . தலைவர் திருமதி.தேன்மொழி துளசிராமன் , அசனமாபேட்டை ஊ . ம . தலைவர் திரு.கே.ஏ.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல் திட்ட விளக்கவுரை ஆற்றினார் . வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு . ஆர்.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 01/08/2009 அன்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு பிறப்புச்சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார் . பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் , திரு . வி.ஜி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பிறப்பு இறப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக