செய்யாறு சுகாதார மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் விழா 20.01.2007 அன்று செய்யாறு தாயார் அப்பாய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . வெம்பாக்கம் , செய்யாறு ஒன்றியங்களைச் சேர்ந்த சுமார் 850 தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது .மாண்புமிகு தமிழக உணவு அமைச்சர் திரு . எ . வ. வேலு நிதி உதவியை வழங்கி சிறப்புரையாற்றினார் .மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . சத்யபிரத சாகு தலைமை வகித்தார் . செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் மரு . எம் . கே. விஷ்ணுபிரசாத் முன்னிலை வகித்தார் . சட்டமன்ற உறுப்பினர்கள் , ஒன்றியக்குழு தலைவர்கள் , நகர்மன்றத்தலைவர் , உறுப்பினர்கள் , உதவி மருத்துவர்கள் , அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் . செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு . கோ. ரெகுநாதன் வரவேற்றார் . பெருங்கட்டூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு . தெ . இரத்தினவேல் நன்றி கூறினார் .
சனி, 28 பிப்ரவரி, 2009
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் விழா 20.01.2007
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவிவழங்கும் விழா 02.11.2007
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் விழா 02.11.2007 அன்று நடைபெற்றது . ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு . ஆர் . வேல்முருகன் நிதி உதவியை வழங்கி சிறப்புரையாற்றினார் .ஒன்றியக்குழு உறுப்பினர்கள் , பெருங்கட்டூர் , தென்கழனி , அசனமாப்பேட்டை , நமண்டி ஊராட்சி மன்றத்தலைவர்கள் , பெருங்கட்டூர் இந்தியன் வங்கி மேலாளர் , பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் ,பெருங்கட்டூர் ,வெம்பாக்கம் உதவி மருத்துவர்கள் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ,சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் , கிராம சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர் . சுமார் 65 தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது .
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுகாதார பயிற்சி 04.05.2007
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுகாதார பயிற்சி 04.05.2007 அன்று நடைபெற்றது . வட்டார மருத்துவர் , நாட்டேரி , அரியூர் உதவி மருத்துவர்கள் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ,சமுதாய சுகாதார செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் , கிராம சுகாதார செவிலியர்கள் , ஊட்டச்சத்து துறை பணியாளர்கள் , ஏராளமான மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர் . மகப்பேறு , குழந்தை நலம் , சுற்றுப்புற சுகாதாரம் ,சத்தான உணவு , அரசு நலத்திட்டங்கள் ,ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சேவைகள் குறித்து .விளக்கப்பட்டது
.
பெருங்கட்டூரில்உலக சுகாதார தினம் 07.04.2007
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் 07.04.2007 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது . வட்டார மருத்துவர் , உதவி மருத்துவர் , சுகாதார பணியாளர்கள் , ஊட்டச்சத்து துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர் . " சுகாதாரத்தை பேணிக்காப்போம் , வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம் " என்ற உலக சுகாதார தின தலைப்பின்படி நடந்து கொள்ள கூறப்பட்டது .
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுதந்திர தின விழா 15.08.2007
பெருங்கட்டூர்ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுதந்திர தின விழா 15.08.2007 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது . வட்டார மருத்துவர் தேசியக்கொடியை ஏற்றினார் . உதவி மருத்துவர் , சுகாதார பணியாளர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் .அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது . பெருங்கட்டூர் உயர்நிலைப்பள்ளியின் N.C.C. மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை தூய்மைப்படுத்தினர் .
அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் பிரசவ அறை திறந்து வைக்கப்பட்டது 15.05.2007
பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையமான அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து கட்டப்பட்ட பிரசவ அறை 15.05.2007 அன்று ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி . லட்சுமி சங்கர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு .வ.அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கினார் . வட்டார வளர்ச்சி அலுவல்ர்கள் , வட்டார மருத்துவர் , உதவி மருத்துவர் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் , சுகாதார பணியாளர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)