சனி, 13 ஜூன், 2009

வளைகாப்பு 18/04/2008
























































18/04/2008 அன்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் , தமிழகத்தில் முதன்முறையாக ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து 148 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது . வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு .ஆர் . வேல்முருகன் , ஊராட்சி மன்றத்தலைவர்கள் திருமதி . தேன்மோழி துளசிராமன் , திருமதி . மல்லிகா பாலகிருஷ்ணன் , திரு. கே.ஏ.பூபதி , திருமதி . மண்ணம்மாள் கேசவன் , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்தனர் . ஆரம்ப சுகாதார நிலைய பிரசவம் பாதுகாப்பானது , சிறந்தது என்பதை கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விளக்கிக்கூறினர் . ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படும் சேவைகள் , வசதிகள் பற்றியும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு விளக்கப்பட்டது . ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்குள்ள பணியாளர்கள் மீது கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் , பொதுமக்களுக்கும் நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் நடத்தப்பட்ட வளைகாப்பில் முத்துலட்சுமி ரெட்டி , ஜனனி சுரக்க்ஷா மகப்பேறு திட்டங்களின் நிதி உதவிகள் , இலவச பயணச்சீட்டு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன . தமிழர் கலாச்சாரப்படி வளைகாப்பு நடத்தப்பட்டு , 5 சுவை உணவு பரிமாறப்பட்டது . அனைத்து நாளிதழ் , வார இதழ்களின் நிருபர்கள் , அனைத்து தொலைக்காட்சி நிருபர்கள் கலந்து கொண்டு செய்திகளை வெளியிட்டு " பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய வளைகாப்பை " அனைவரும் பாராட்டும்படி செய்தனர் .



































ஞாயிறு, 31 மே, 2009

நவீன ஆண் குடும்பநல அறுவை சிகிச்சை ( N.S.V.) முகாம் ‍‍:08/05/2009


08/05/2009 அன்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 ஆண்களுக்கு நவீன‌ ஆண் குடும்பநல அறுவை சிகிச்சை ( N.S.V.)நடத்தப்பட்டது . வழூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு எஸ் . ராஜா , மரு.சி.காவேரி,மரு.எம்.விஜயராகவன் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர் . வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் தலைமையில் 9 சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கிராமம்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி ,அறுவை சிகிச்சை பயனாளிகளை தேர்வு செய்தனர் .

தமிழக அரசின் குடும்ப நல நிதி











பணியில் இருக்கும்போது இயற்கை எய்திய மாமண்டூர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை பணியாளரின் துணைவியாருக்கு தமிழக அரசின் குடும்ப நல நிதி ரூ.1.5 லட்சத்திற்கான காசோலை வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் அவர்களால் வழங்கப்பட்டது .

உலக புகையிலை எதிர்ப்பு நாள் ஊர்வலம் 31/05/2009





































உலக புகையிலை எதிர்ப்பு நாள் ஊர்வலம் 31/05/2009 அன்று வடமணப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது . வடமணப்பாக்கம் ஊராட்சி மன்றதலைவர் திருமதி . மண்ணம்மாள் கேசவன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் . ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.ரத்தினவேல் விளக்கிக் கூறினார் . முடிவில் கிராம சுகாதார செவிலியர் ஆர்.கல்யாணி நன்றி கூறினார் .

திங்கள், 6 ஏப்ரல், 2009

உலக சுகாதார தினம் 07.04.2009
































































உலக சுகாதார தினம் 07.04.2009 செவ்வாய்க்கிழமை அன்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்புற கொண்டாடப்பட்டது . செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மரு.கொ.ச.தி.சுரேஸ் தலைமை தாங்கி "அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகளை நாடுவோம் ; உயிர்களைக்காப்போம் " என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் . தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநல கூடுதல் செயலர் திரு .ஜி.ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . ம‌களிர் சுய‌ உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 100 பெண்கள் பங்கேற்ற‌னர் . மாவட்ட புள்ளியியல் உதவியாளர் திரு. ஜி.பி.பாஸ்கரன் , வட்டார மருத்துவர் மரு.தெ.இரத்தினவேல், உதவி மருத்துவர் ( சித்தா ) மரு . ஆர். ரஜினிகாந்த் , சமுதாய சுகாதார செவிலியர் திருமதி . கீதா ராபர்ட்ஸ் ,பகுதி சுகாதார செவிலியர் திருமதி . லில்லி ரோஸ்லிண்ட் , சுகாதார ஆய்வாளர் திரு ராதாகிருஷ்ணன் , கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர் . உலக சுகாதார தினத்தையொட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன .