ஞாயிறு, 28 ஜூன், 2009

' தி ஹிந்து ' ஆங்கில நாளிதழில் நமது ஆரம்ப சுகாதார நிலையம் - மார்ச் 1 , 2008

' தி ஹிந்து ' ஆங்கில நாளிதழில் நமது ஆரம்ப சுகாதார நிலையம் பற்றிய செய்தி ( ஒரு பக்க அளவுக்கு )மார்ச் 1 , 2008 ல் வெளியானது .

சித்தாத்தூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் - அரசாணை

வெம்பாக்கம் ஒன்றியம் சித்தாத்தூர் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சித்தாத்தூரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது . அரசாணை நகல் இதோடு இணைக்கப்பட்டுள்ளது .




பெருங்கட்டூர்மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் - அரசாணை

வெம்பாக்கம் ஒன்றிய பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டுள்ளது . அரசாணை நகல் இதோடு இணைக்கப்பட்டுள்ளது .


சனி, 27 ஜூன், 2009

அசனமாப்பேட்டை டெங்கு OUTBREAK - டிசம்பர் 2008

பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட அசனமாப்பேட்டை கிராமத்தில் கடந்த ஆண்டு ( 2008 ) டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் 3 தெருக்களைச் சேர்ந்த மக்களில் பலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது .

20/12/2008 சனிக்கிழமை அன்று புறநோயாளிப்பிரிவில் ஏறக்குறைய 20 நபர்களுக்கு மேல் ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் அசனமாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வந்தனர் . ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் ஒரே பகுதியைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்கு வரவே நமது மருத்துவக்குழு உஷாரானது . மறுநாள் 21/12/2008 ஞாயிறன்று நடக்கவிருந்த பல்ஸ் போலியோவிற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து விட்டு ( 20/12/2008 சனிக்கிழமை ) மாலை சுமார் 5 மணிக்கு நமது மருத்துவக்குழு ( மருத்துவர் , சுகாதார ஆய்வாளர் , ஆய்வக உதவியாளர் , கிராம சுகாதார செவிலியர் ) காய்ச்சல் கிளினிக் நடத்த தேவையான மருந்துகள் , இரத்ததடவல் திரட்ட தேவையான ஆடிகள் போன்றவற்றுடன் அசனமாப்பேட்டை கிராமத்துக்கு சென்றது .
அசனமாப்பேட்டை கிராமத்தில் 3 தெருக்களில் உள்ள சுமார் 70 நபர்களுக்கு மேல் காய்ச்சல் , கை கால் மூட்டு வலி , வீக்கம் ,குளிர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வந்தனர் . நமது அண்டை மாவட்டங்களில் அந்த நேரத்தில் 'சிக்குன்குனியா' காய்ச்சல் பரவியிருக்கவே , இதுவும் அப்படியாக இருக்கலாம் என ஒரு provisional diagnosis செய்து , சிகிச்சை அளிக்கப்பட்டது . இரத்த மாதிரிகள் ( Blood smears and Serum samples ) எடுக்கப்பட்டது . குடிநீர் மாதிரிகள் கள ஆய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது .

21/06/2008 அன்று முழுதும் பல்ஸ் போலியோ முகாம் .

22/06/2008 அன்றும் நிறைய காய்ச்சல் கேஸ்கள் o.p.க்கு வரவே , துணை இயக்குநருக்கு தகவல் அளிக்கப்பட்டது . மாவட்ட பூச்சியியல் வல்லுநர் தலைமையில் குழு களத்தில் இறங்கியது . கொசுப்புழு வளரும் இடங்கள் கண்டறியப்பட்டது . டெமிபாஸ் மருந்து தெளிக்கப்பட்டது . serum samples were sent to zonal entomologist , vellore . நமது fogging machine சிறிது மக்கர் செய்யவே , பெரணமல்லூர் , ச.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து fogging machine கள் கொண்டு வரப்பட்டது . நமது fogging machine வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டு , சரி செய்யப்பட்டது . காய்ச்சல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன . 24 மணிநேரமும் அந்த பகுதி கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது . மாலை 7 மணியளவில் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டது . டெங்கு என கண்டறியப்பட்டதாக senior entomologist , vellore அவர்கள் தகவல் அளித்தார் .

23/12/2008 காலை 7 மணி முதல் நமது காய்ச்சல் கண்காணிப்பு குழுவும் , பூச்சியியல் வல்லுநர் தலைமையிலான குழுவும் , நடமாடும் மருத்துவக்குழுவும் களத்தில் தீவிரமாக பணியாற்றினர் . Thermal fogging operation carried out on the entire village .

On 24/12/2008 Indoor fogging carried out on the affected streets and fogging was done on the adjacent villages like Thenkalani and Perungattur . Antilarval activity tightened . Zonal Entomological team headed by Senior Entomologist visited and appreciated our work and asked to continue antilarval work and fogging operations for 1 more week .




25/12/2008 new cases decreased . old cases recovering . பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது . கம்பூசியா மீன்கள் நீர்நிலைகளில் விடப்பட்டது .

26/12/2008 , 27/12/2008 , 28/12/2008 , 29/12/2008 மற்றும் 30/12/2008 ஆகிய நாட்களில் மேற்குறிப்பிட்ட பணிகள் தொடரப்பட்டு , 31/12/2008 அன்று புதிய கேஸ்களும் இல்லை , பழைய கேஸ்கள் சகஜ நிலைக்குத திரும்ப ஆரம்பித்தனர் .

இந்த டெங்கு Outbreak விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதற்கு முக்கிய காரணம் : OUR PHC TEAM 'S TEAMWORK , EXCELLENT FIELD WORK BY OUR FIELD STAFF , RAPID ACTION FROM OUR ENTOMOLOGICAL ASSISTANT , FINE COOPERATION FROM VILLAGE PANCHAYATH & PUBLIC and CONSTANT GUIDANCE FROM D.D.H.S .

( 3 டெங்கு பாசிட்டிவ் இரத்த மாதிரிகளில் ஒன்று ,
ஒரு மருத்துவக்கல்லூரி மாணவியுடையது )

இதோ ஒரு POWER POINT PRESENTATION



































மலேரியா விழிப்புணர்வு மாதம் ஜூன் 2009








பெருங்கட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு மாதம் ஜூன் 2009 கொண்டாடப்பட்டது .பள்ளி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடத்தப்பட்டது . பேரணியில் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியபடி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர் . பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் மலேரியா காய்ச்சல் பரவும் விதம் , கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் , சிகிச்சை முறைகள் போன்றவை பற்றி எடுத்துரைக்கப்பட்டது . கொசுப்புழுக்களை அழிக்கும் க‌ம்பூசியா மீன்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது . கூட்டத்தில் மாவட்ட மலேரியா அலுவலர் திரு. கோ.மணிவர்மா , வட்டார மருத்துவ அலுவலர் மரு.தெ.இரத்தினவேல்,சுகாதார ஆய்வாளர் திரு.வி.ஜி.இராதாகிருஷ்ணன் , கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .